சாதனை மேல் சாதனை படைக்கும் "மாஸ்டர்" திரைப்படம்

#TamilCinema
Prasu
2 years ago
சாதனை மேல் சாதனை படைக்கும் "மாஸ்டர்" திரைப்படம்

விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021- பொங்கல் அன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

பின் சமீபத்தில் இந்தியாவில் அதிகம் இணையத்தில் தேடப்பட்ட திரைப்படங்களில் 6-வது இடத்தைப் பெற்ற மாஸ்டர் தற்போது 2020-ஆண்டில் உலகளவில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடல்களில் ’மாஸ்டர் ஆல்பம்’ முதலிடம் பெற்று புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

இதை அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகக் கொண்டாடப்பட்டதுடன் யூடியூப்-ல் இதுவரை 30.5 கோடி பார்வைகளைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!